உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற நியூசிலாந்த அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 95 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 48 ஓவரில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.