இன்தியா முழுவதும் நேற்று கோலாகலமாக தீபாவளி கொண்டப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு மக்கள் பட்டாசுகளை வெடித்த நிலையில், டெல்லி நகரின் காற்றுத் தரம் “மிகவும் மோசமான” நிலையில் இருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது.தற்போது, நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (AQI) 350-ஐ கடந்துள்ளது. குறிப்பாக ஆனந்த் விஹார், ஐடிஓ, மற்றும் நரேலா போன்ற பகுதிகளில் மாசு அளவு அதிகரித்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதனால் மூத்தவர்கள், குழந்தைகள், மற்றும் சுவாச பிரச்சனை கொண்டவர்கள் வெளியில் செல்லாமல் இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வானிலை ஆய்வுத்துறையின் மதிப்பீட்டுப்படி, அடுத்த 48 மணிநேரங்களில் காற்றின் வேகம் குறைவதால், மாசுக் கூறுகள் வளிமண்டலத்தில் நீண்ட நேரம் தங்கியிருக்கும் அபாயம் உள்ளது. இதனால் AQI “அபாயகரமான நிலைக்கு” செல்லும் சாத்தியம் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

