மிலாது நபி செப்டம்பர் 17 அன்று கொண்டாடப்படும்;தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு

அரபு நாடுகள் இந்தியா உலகம் கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

மிலாது நபி 17.09.2024 அன்று கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
முகம்மது நபிகள் அவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை மக்களிடம் அவருடைய எளிமையான போதனைகள் மூலம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுசேர்த்த பெருமைக்கு உரியவர்.
இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளையே மிலாது நபியாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். முகம்மது நபி, கிபி 570 ம் ஆண்டு ரபி உல் அவல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தின் 12 ம் நாளில் மக்கா நகரில் அவதரித்தார். இந்த நாளையே மிலாது நபியாக இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 17-ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஹிஜ்ரி 1446 சஃபர் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 04-09-2024 தேதி அன்று மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 06-09-2024 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் மிலாதுன் நபி செவ்வாய்க்கிழமை 17-09-2024 தேதி கொண்டாடப்படும்.
இவ்வாறு தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *