வாட்ஸ்-ஆப் செயலியில் Display Picture (DP) வைத்துக் கொள்ள புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவிப்பு

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா வரும் நிகழ்ச்சிகள்

வாட்ஸ்-ஆப் செயலியில் Display Picture (DP) வைத்துக் கொள்ள புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் செயலியை இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் ஆப்க்கு பயனர்களாக உள்ளார்கள். இந்த வாட்ஸ் ஆப் பிறருடன் தகவல்களை எளிதில் பகிர்ந்துக் கொள்ளவும், பயனர்கள் விரும்பும் பல முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
ஆடியோ, வீடியோ காலிங் வசதி, ஸ்டேட்டஸ் அப்டேட், மெசேஜிங் வசதி, குரூப் சேட் எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய வசதிகளை பயனர்களின் வசதிக்கு ஏற்ப தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. சமீபத்தில் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது. அதே போல் ‘லாக் சாட்’ என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.
இதன் மூலம், ஒருவர் தான் வைத்திருக்கும் இரண்டு மொபைல் எண்களிலும், வாட்ஸ்ஆப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை கொண்டு வர முடியும். ஒரே செயலியில், இனி இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளை ஒருவரால் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனர்கள் ப்ரோஃபைல் போட்டோ வைத்துக் கொள்ள புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களின் தொடர்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு ஒரு தன்முகப்பு படமும், இல்லாதவர்களுக்கு மாற்று தன்முகப்பு படத்தையும் வைத்துக் கொள்ளலாம். பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு மேலும் ஓர் அரணாக இந்த வசதி பார்க்கப்படும் என வாட்ஸ்ஆப் பீட்டாஇன்ஃபோ என்கிற இணையதளம் தெரிவிக்கிறது.
மேலும், வாட்ஸ்ஆப்பில் பயனர் பெயர் அமைத்துக் கொள்ளும் வசதியும் சோதனை முயற்சியில் உள்ளது. தற்போது மொபைல் எண் மட்டுமே வாட்ஸ் அப்பில் ஒருவரை மற்றொருவர் தொடர்பு கொள்ள கருவியாகவுள்ள நிலையில், பயனர் பெயர் வசதி மூலமாக பெயரைத் தேடி தொடர்பு கொள்ள இயலும் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் வாட்ஸ்-ஆப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய மாற்றத்தை அறிமுகம் செய்தது.

Leave a Reply

Your email address will not be published.