கோடை விடுமுறை என்பதால் உதகை, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உதகை,கொடைக்கானலில் கோடை கால கண்காட்சிகளுக்கு கூடுதல் வாகனங்களை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. உதகை, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாடு விதித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதன் தொடர்பான விசாரனையில் கோடை கால கண்காட்சிகளுக்கான தேவையானால், மேலும் 500 வாகனங்களை அனுமதிக்கலாம் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் பாத சக்கரவர்த்தி உத்திவிட்டுள்ளனர்.
 
	

 
						 
						