துப்பாக்கிச்சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கின் 50 மீட்டர் 3 பொசிஷன் துப்பாக்கிச் சுடுதல் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன. 44 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்திய வீரர் குசேல் ஸ்வப்னில் உள்ளிட்ட 8 பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். 590 புள்ளிகளுடன் 7ஆவது இடம் பிடித்த ஸ்வப்னில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இந்த போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 11ஆவது இடம் பிடித்து வெளியேறினார்.
இதையடுத்து, நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்வப்னில் விளையாடவுள்ளார்.
