களைகட்டிய பொங்கல் திருவிழா; மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற மாடுபிடி வீரர் பாலமுருகன்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழர் விளையாட்டு தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

Mஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பெற்ற வலையங்குளம் பாலமுருகனுக்கு முதலமைச்சர் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி காலை தொடங்கி மாலை நிறைவடைந்தது. புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 12 சுற்றுகள் நடைபெற்று நிறைவு பெற்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை அடக்கி வலையங்குளம் பாலமுருகன் முதலிடம் பிடித்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், 8வது சுற்று வரை 16 காளைகளை அடக்கி அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி தொடர்ந்து முதலிடம் வகித்தார்.
பின்னர், ஒரே சுற்றில் 18 காளைகளை அடக்கி வலையங்குளம் பாலமுருகன் முதலிடத்திற்கு முன்னேறினர். அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை பிடித்து 2ம் இடம் பிடித்தார். அவனியாபுரம் ரஞ்சித் 16 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் 937 காளை அவிழ்க்கப்பட்டுள்ளன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 57 பேர் காயமடைந்தனர். மாடுபிடி வீரர்கள் 27 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 21 பேர், பார்வையாளர் 9 பேர் என 57 பேர் காயமடைந்தனர். முதலிடம் பெற்ற வலையங்குளம் பாலமுருகனுக்கு முதலமைச்சர் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *