குடியரசுத் தலைவரின் தமிழக பயணம் – கோவை ஈஷா மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டார்

அரசியல் ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் கோயில்கள் செய்திகள் தமிழ்நாடு வரும் நிகழ்ச்சிகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று தமிழகம் வந்தார். புதுடில்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மதுரைக்கு வந்த குடியரசுத் தலைவர் அங்கிருந்து கார் மூலம் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு வந்தடைந்தார். அவருக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வுக்குப் பின், ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை, நீலகிரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவையில் இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் ஜனாதிபதி குன்னூர் வருவதால் அப்பகுதியிலும் ஹெலிகாப்டர் ஒத்திகையும் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்திலும் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.