ஃபார்சூன் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அதிக வரி செலுத்திய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய் இடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் ஷாருக் கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் 92 கோடி ரூபாய் வரியாக செலுத்தியுள்ளார். இரண்டவதாக தமிழ்த் திரையுலகின் நடிகர் விஜய் 80 கோடி ரூபாய் வரியாக செலுத்தியுள்ளார். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் ரூ. 200 கோடி செலவில் ‘லியோ’ திரைப்படம் வெளியானது. லியோ திரைப்படம் ரூ. 600 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்தது. இந்தப் படத்துக்கு விஜய்க்கு சம்பளமாக ரூ. 120 கோடி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த ஆண்டு கோட் திரைப்படம் வெளியானது, இந்தப் படத்துக்கு சம்பளமாக ரூ. 200 கோடி வரை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக சல்மான்கான் மூன்றாவது இடத்திலும், அமிதாப் பச்சன் நான்காவது இடத்திலும், விராட் கோலி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.