2023ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த 2 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், ஒவ்வொரு மாநில அரசு சார்பில் நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் 2023ம் ஆண்டில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழகத்தை சேர்ந்த ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியை என மொத்தம் 2 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.
அதாவது மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகியோருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு டெல்லி விஞ்ஞான் பவனில் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும் விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

