18 நாட்கள் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா பக்தர்கள் புடைசூழ கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதேபோல் இந்த ஆண்டு சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு பிரம்மாண்ட கொடி மரம் அருகே விநாயகர் மற்றும் அம்பாளுடன் சந்திரசேகர் எழுந்தருள கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய துணிகளை கொண்டு நந்தி பெருமான் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடிமரத்தில் சிவ கானங்கள் இசைக்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
18 நாட்கள் நடைபெறும் விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற மே 7ஆம் தேதி நடைபெறுகிறது.

