ரூ.10 லட்சத்துக்கு மேலான பொருட்களை வாங்கினால் 1% வரி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆடம்பர பொருட்களை வாங்கும் போது 1% வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தார். ரூ.10 லட்சத்திற்கு மேல் விலை கொண்ட கைப்பைகள், மணிக்கட்டு கடிகாரங்கள், காலணிகள் மற்றும் விளையாட்டு உடைகள் போன்ற ஆடம்பரப் பொருட்களுக்கு இப்போது 1 சதவீத வரி (TCS) விதிக்கப்படும்.2025 ஏப்ரல் 22 முதல், விற்பனை விலை ரூ.10 லட்சத்தை தாண்டினால், குறிப்பிட்ட ஆடம்பரப் பொருட்களின் விற்பனைக்கு 1 சதவீத விகிதத்தில் TCS பொருந்தக்கூடியதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது. ஏப்.22ம் தேதிக்கு முன்னர் வாங்கிய ஆடம்பர பொருட்களுக்கு இந்த வரி பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
