இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை 2024-ல் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் (எப்ஏடிஏ) தகவலின்படி, கடந்த ஆண்டு ஒரு லட்சம் மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இது 2023-ல் விற்பனை செய்யப்பட்ட 82,688 கார்களுடன் ஒப்பிடும் போது 20 சதவீதம் அதிகமாகும். ஆண்டு முடிவில் விலை குறைப்பு செய்யப்பட்டதன் மூலம் விற்பனை அதிகரித்தது என்பது முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. மின்சார வாகனங்கள் தொடர்பான சார்ஜிங் அமைப்பு, பேட்டரி ஆயுள், மறுவிற்பனை மதிப்பு போன்றவை குறித்து வாடிக்கையாளர்களுக்கு பல சந்தேகங்கள் இருந்தாலும், கடந்த ஆண்டில் மொத்த மின்சார வாகன விற்பனை 2.4 சதவீதம் அதிகரித்து 40.7 லட்சத்தை அடைந்துள்ளது. எலக்ட்ரிக் வாகன விற்பனியில் 61,496 வாகனங்களை விற்பனை செய்த டாடா மோட்டார்ஸ் எப்போதும் முதலிடத்தில் உள்ளது. இது, 2023-ல் 60,100 வாகனங்களை விற்பனை செய்தது. இருப்பினும், டாடா மோட்டார்ஸ் இன் பங்களிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 73 சதவீதத்திலிருந்து 62 சதவீதமாக குறைந்துள்ளது.