இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவையொட்டி சென்னை மெரினாவில், இன்று விமானப்படையின் பிரமாண்ட ஏர் ஷோ சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 அன்று கொண்டாடப்படுகிறது. இதில் சுகோய், ரபேல்,தேஜஸ் உள்ளிட்ட 72 விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன. தமிழ்நாட்டில் முதன்முறையாக, மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு அற்புதமான விமான சாகச நிகழ்ச்சி தொடங்கியது. ஆகாஷ் கங்கா குழு சார்பில் 2,000 அடி உயரத்தில் இருந்து பறக்கும் பாராசூட்டில் இருந்து தரை இறங்கியது , பார்வையாளர்களை உற்சாகமாக்கியது. சுகோய், ரஃபேல், மற்றும் தேஜஸ் உள்ளிட்ட 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்வில் பங்கேற்றன. இந்த நிகழ்வில் சுகோய்-30 MKI, ரஃபேல், மிராஜ் 2000, மிக்-29, மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போன்ற பல போர்க் விமானங்களிள் சாகச நிகழ்ச்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தது. வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள் ஹார்ட் வரைந்து பார்வையாளர்களை மகிழச்செய்தன. சி17 ரக விமானத்தின் சூர்யகிரண் அணிவகுப்பு மக்களை வியப்பில் ஆழ்த்தியது. சூரியனை நோக்கியப்படி சீறிப்பாய்ந்து .சேத்தக் ஹெலிகாப்டர்கள் மெரினா கடற்கரையில் குறைந்த உயரத்தில் பறந்து, மக்களின் புகைப்படங்களை எடுத்து அவர்களை உற்சாகமாக்கியது.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்களும் வானில் நிகழ்ந்த சாகச நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். சுமார் 5 லட்சம் பேர் வரை இந்திய விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சியை பார்த்ததால் உலகிலேயே அதிக மக்கள் பார்த்த ராணுவ நிகழ்ச்சி என்ற சாதனை படைத்தது சென்னை ஏர் ஷோ. சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.