இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிரிவு சார்பில், 175வது நிறுவன தினத்தை முன்னிட்டு, ஓய்வுபெற்ற அதிகாரிகளை மரியாதை செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், பொது துணை இயக்குநர் அஜய்குமார் உரையாற்றும்போது, ”திருவண்ணாமலை உள்ளிட்ட சில இடங்களில், பூமியின் அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன,” எனக் கூறினார்.தமிழகத்தின் சில பகுதிகளில் தங்கம் மற்றும் பிற கனிம வளங்கள் காணப்படுகின்றன. நாட்டின் முழு அளவிலான கனிம வளங்களைப் பற்றிய புவியியல் ஆய்வுகளை மேற்கொண்டு, மத்திய அரசுக்கு ஒரு அறிக்கையை சமர்பித்துள்ளோம். தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை ஆராய்ந்த போது, மொபைல் போன் பேட்டரியில் பயன்படுத்தப்படும் ‘லித்தியம்’ பெரும் அளவில் உள்ளதை கண்டறிந்தோம். இதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன என அவர் குறிப்பிட்டார்.

