மதுரையில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 2ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், மே 5ம் தேதி அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவில் ஏப்ரல் 30ம் தேதி முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அன்று மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மே 1ம் தேதி நடைபெறுகிறது. மே 2ம் தேதி மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். அன்று இரவு மீனாட்சியம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். மே 3ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். அதனை தொடர்ந்து 4ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. தொடர்ந்து அழகர் கோயில் சித்திரை திருவிழாவும் தொடங்குகிறது. அதில் முக்கிய நிகழ்வாக மே 4ம் தேதி மதுரை வரும் அழகரை மக்கள் எதிர் கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி புதூர் மூன்றுமாவடி பகுதியில் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மே 5ம் தேதி நடைபெறுகிறது.