சென்னையில் தவெக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், 3 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ரமலான் மாதத்தையொட்டி, தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த், இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ள இருப்பதாகவும், சுமார் 3 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இமாம் முகமது மன்சூர் காசிப், மாலை 6 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் விஜய் தங்களுடன் இணைந்து தொழுகை நடத்தவுள்ளதாகக் கூறினார்.
