கேரளா, 30 ஜூலை 24,
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடியில் செவ்வாய்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது,அதில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என தகவல்.
தீயணைப்பு மற்றும் NDRF பணியாளர்கள் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (KSDMA) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் தற்போது வரை குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் அரசு ஈடுபட்டு வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மீட்புப் பணிகளை மேற்பார்வையிட மாநில அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு விரைவில் செல்வார்கள் என்றும் முதல்வர் விஜயன் தனது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (KSDMA) குழுக்கள் தீயணைப்பு வீரர்கள் மற்றும் NDRF உறுப்பினர்கள் உட்பட பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து மக்களை மீட்டு வருகின்றனர்.இரண்டாவது NDRF குழு தற்போது வயநாடு நோக்கிச் சென்றுள்ளது.
KSDMAஇன் தகவலின்படி கண்ணூர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மேலும் இரண்டு குழுக்கள் மீட்புப் பணிகளில் உதவ அனுப்பப்பட்டுள்ளன.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மீட்புப் பணிகளை கடினமாக்குவதாகவும் ஏராளமானோர் சிக்கித் தவிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பிற மழை தொடர்பான பேரிடர்களுக்கு பதிலளிக்கும் வகையில் சுகாதாரத் துறையின் தேசிய சுகாதார இயக்கம் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.