திருவண்ணாமலை நிலச்சரிவில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்பு.

இந்தியா இயற்க்கை சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி விபத்துகள்

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் மூன்று இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. வ.உ.சி. நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி வீடு புதைந்ததால் அங்கு வசித்து வந்த 7 பேரில் 5 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில், 2 பேரின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 6வது நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 5 பேரின் சடலம் நேற்று மீட்கப்பட்ட நிலையில், இன்று 2 பேரின் சடலம் மீட்கப்பட்டது. மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் 3-வது நாளாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர், இதற்கிடையில் மண்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. இந்த சூழலில், மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சென்னை ஐ.ஐ.டி.யை சேர்ந்த மண் பரிசோதனை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.இதன் மூலம், மண்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் தற்போது மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்றாவது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் இரண்டு நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. முன்பு புதைந்த அந்த வீட்டில் ராஜ்குமார் (32), அவரது மனைவி மீனா (26), அவர்களின் மகன் கவுதம் (9), மகள் இனியா (7) மற்றும் ராஜ்குமாரின் உறவினர்களின் மகள்கள் மகா (12), வினோதினி (14), ரம்யா (12) ஆகிய 7 பேர் சிக்கியிருந்தனர் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *