அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் , கட்டப்பட்ட ராமர் கோயில் கடந்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்பட்டது. குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா 3 நாட்களுக்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனால் அயோத்தி நகரமே வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
விழாவில் பங்கேற்ற லட்சக்கணக்காக மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அயோத்தியில் குவிந்துள்ளனர். ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டபடி ஆடிப்பாடியபடி சாமியை தரிசிக்கச் செல்கின்றனர். 3 நாட்கள் கொண்டத்தின் முதல் நாளில், பால ராமருக்கு சிறப்பு அபிஷேங்கள் செய்யப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.