ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட் போட்டி ரசிகர்களிடையே எப்போதும் தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளது. போட்டி இடையில் ஒளிபரப்பு செய்யப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயும் ஆண்டுக்கு ஆண்டுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வரும் ஐபிஎல் தொடரில் ரிலையன்ஸ் ஜியோஸ்டார் நிறுவனம் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் மூலம் ரூ.6000 கோடி வருவாயை ஈட்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் மூலம் ரூ.3,900 கோடி வருவாயைப் பெற்றது. நடப்பு ஆண்டில் ஐபிஎல் தொடருக்கு முந்தைய ஆண்டுகளை விட அதிக வரவேற்பு காணப்படுவதால், விளம்பர வருவாய் 58 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, டிஜிட்டல் ஊடகத்திலிருந்து 55 சதவீதம் மற்றும் தொலைக்காட்சியிலிருந்து 45 சதவீதம் வருவாயாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் டி-20 தொடரின் தொடக்கம் மார்ச் 22-ம் தேதியும், இறுதிப் போட்டி மே 25-ம் தேதி நடைபெறுகிறது. சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் இடைவெளியில் போதைப்பொருள் சம்மந்த விளம்பரங்களை ஒளிப்பரப்புவதற்க்கு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
