அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் விடைத்தாள் நகலை இன்று பிற்பகல் 2 மணி முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல் 2 அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
நாளை பிற்பகல் 1 மணி முதல் வரும் ஜூன் 1ஆம் தேதி மாலை 5 மணி வரை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.