கர்நாடகத்தின் தும்கூரு மாவட்டம் பிதனகெரே கிராமத்திலுள்ள பசவேசுவரா மடத்தில் உலகத்திலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சிற்பி மாரிமுத்து தலைமையிலான 50பேர் கொண்ட குழு இதை 2014ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக திறந்து வைத்தார்.
இந்த சிலை அனைத்து இயற்கை சீற்றங்களையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 161அடி உயரம் கொண்டுள்ள இந்த சிலை தான் உலகின் மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை ஆகும். இந்த விழாவில் கர்நாடக முதல்வர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் இது பொதுமக்கள் தரிசனத்திற்காக திறந்து விடப்பட்டது.