உலகப் புகழ் பூரி ரதயாத்திரை – சுவாரசிய தகவல்கள்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள்

இந்தியாவில் கொண்டாடப்படும் மத விழாக்களில் பூரி ரதயாத்திரை உலகப் புகழ் பெற்ற நிகழ்ச்சி. பூரி ஜெகநாதர் திருக்கோயில் ஒடிசா மாநிலம், கடற்கரை நகரமான பூரியில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ரதயாத்திரை மிகவும் பிரசித்திப் பெற்றது. தெற்கிந்தியாவில் திருப்பதி வெங்கடாஜலபதி, சபரிமலை ஐயப்பன், பழனி முருகன் திருக்கோயில்கள் எவ்வளவு பிரபலமோ, அதேப் போல பூரி ஜெகநாதர் திருக்கோயில் மிக மிக பிரபலம்.
ஆண்டுதோறும் ஆடி 2ஆம் ஆண்டு ரதயாத்திரை நிகழ்ச்சி நடைபெறும். இதனைக்காண உலகெங்கிலும் உள்ள இந்துமத பக்தர்கள் லட்சக்கணக்கில் பூரி நகரத்திற்கு வருவார்கள். ஆண்டுதோறும் புதிதாக செய்யப்படும் ரதத்தில் ஜெகநாதர், பலராமன், சுபத்திரை முவரும் ரத்ன வீதியில் வலம் வருவர்.
இந்த ரத யாத்திரைக்கு செய்யப்படும் ரதங்கள் பற்றிய சில சுவாரஸ்யமான செய்திகள் உள்ளன. 16 சக்கரங்களைக் கொண்ட சிகப்பு, மஞ்சள் நிறத்துணியால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஜெகநாதரும், 14 சக்கரங்களுடன் சிகப்பு, பச்சை நிறத்துதணியால் அலங்ரிப்பட்ட ரதத்தில் பலராமனும், 12 சக்கரங்களுடன் சிகப்பு, கருப்பு நிற ரதத்தில் சுபித்திரையும் ரத்ன வீதியில் ரதயாத்திரை புறப்படுவார்கள்.
பூரி நகரத்து மன்னர் கஜபதி ரத்ன வீதியை பாரம்பரிய முறைப்படி முதலில் சுத்தம் செய்வார். அதன்பின் பலராமன் ரதம் முதலில், சுபத்திரை ரதம் அதன்பின்னும், ஜெகநாதர் ரதம் கடைசியாக ரத்ன வீதியில் புறப்படும். ரத்னவீதியில் ஆரம்பிக்கும் ரத யாத்திரை குண்டிச்சா கோயில் வரைச் சென்று மீண்டும் ஜெகநாதர் திருகோயில் வந்து நிலைகொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published.