ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான மோதல் 52வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்த பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்., 24ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பல உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வந்துள்ள நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. பல நாடுகள் உக்ரைனுக்கு நிதியும் இதர உதவிகளும் அளித்து வருகின்றன. அதில் பிரிட்டனும் அடக்கம். உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுதங்களை தந்து உதவியதுடன் கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு சென்று போரிஸ் ஜான்சன் நேரில் ஆய்வு நடத்தியதுடன் நிதி மற்றும் ஆயுத உதவிகள் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த தடை அறிவிப்பு வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.